Skip to main content

அருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா



ஆலய வரலாறு : அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கணேசர் திருக்கோயில். சமூக சேவை மன்றமாக பதிவு செய்யப்பட்ட இவ்வமைப்பு 1999ம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பக்தர்களின் வழிபாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக அருள்மிகு கணேசர் திருக்கோயில் உருவாக்கப்பட்டது. கவய் இந்து துறவிகள் மட நிறுவனர் சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி என்பவரால் இக்கோயிலில் மூலவர் விக்ரஹம் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. ஹவாய் தீவில் உள்ள துறவிகள் மடம் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்டிருப்பதற்கும் இவரே முக்கிய காரணமாகும்.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடா பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்கள் ஒன்று கூடும் இடமாக இக்கோயில் திகழ்கிறது. அதனால் இக்கோயில் ஆன்மிக, கலாச்சார, கல்வி, சமூக நிகழ்வுகள் மற்றும் சேவைகள் செய்யும் இடமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இக்கோயிலுக்கு விநாயகப் பெருமானை வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்துக்களின் விழாக்கள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளும் மாதந்தோறும் இக்கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பக்தர்களும் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் அளவிற்கு பெரிய பிரார்த்தனை கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் என சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலில் தன்னார்வ தொண்டு புரிந்து வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உதவி செய்தல், வீடற்றோருக்கு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தல், உணவு வழங்குதல், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூல நல செயல்பாடுகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமூக ஆர்வலர்கள் வசூலித்து கொடுத்த நன்கொடைகளின் மூலம் 2004ம் ஆண்டு கோயிலுக்கென தனியிடம் பெறப்பட்டு, 2006ம் ஆண்டு தற்போது உள்ள ஆலயம் அமைக்கப்பட்டது.

கோயிலின் சிறப்புக்கள் : குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான தியானம், ஆன்மிகம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஆரோக்கியம் மட்டுமின்றி பெரியோர்களுக்கு மதிப்பளிக்கும் பண்பும் கற்றுத் தரப்படுகிறது. அனைத்து தரப்பினருக்குமான நூலகம், வழிபாட்டுக் கூடம், திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் நடத்துவதற்கான மண்டபம், உணவுக் கூடம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இக்கோயிலில் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வாகன வசதி, ‌நந்தவன வசதி, சேமிப்பு அறை, அலுவலக அறை உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆலய முகவரி : Sri Ganesh Temple Society of British Columbia

7656 Main Street
Vancouver, BC V5X 3K3

தொலைப்பேசி : 604-327-2924

இணையதளம் : http://www.sriganeshbc.com

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

Amazing Oranges~~simply superb

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...