Skip to main content

விண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..!




''கடைசியாக சுவனம் செல்பவனின் இருப்பிடம் இந்த (ஒரு) பூமியளவு இருக்கும்'' என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை இப்போது நினைத்துப்பார்த்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

நமது பூமி அடங்கும் அகிலத்தில் (கலாசி) மட்டும் சுமார் ௧௦௦ பில்லியன் பூமியை ஒத்த கோள்கள் இருக்கின்றன என்றும் அதில் எவற்றிலாவது பூமியில் இருப்பது போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய தன்மை இருக்கலாம் என்றும் அல்லது அவ்வாறு அமையலாம் என்றும் அமெரிக்க விண்ணியல் ஆய்வு மையம் ஒன்றின் சார்பில் விஞ்ஞானிகளால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து மனிதன் மேற்கொண்ட அவதானிப்புக்களில் இதுவரை சுமார் ௩௦௦ கோள்களையே அவன் விண்வெளியில் இனங்கண்டிருக்கிறான். அவற்றில் பல வியாழன் கோள் போன்ற அடர்த்தி குறைந்த வாயுக் கோள்களாகும்..! அத்துடன் அவை அவற்றின் நட்சத்திரங்களை அண்மித்து சுற்றி வருவதால் அவற்றில் உயிரினங்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு மிகக் குறைவே. மனிதன் அவதானித்துள்ள கோள்களில் ஒரு சிலவே உயிரினங்கள் வாழத்தக்க தகவைக் கொண்டிருக்கின்றன.

மனிதனின் செயற்பாட்டால் தீவிரமடைந்திருக்கும் பூமி வெப்பமுறுதலின் விளைவாக பூமியில் உயிரினங்கள் வாழக் கூடிய சூழலை அவன் இல்லாது ஆக்கிவிடுவான் என்ற நிலை தோன்றி இருக்கும் இவ்வேளையில் அமெரிக்க மற்றும் மேற்குலக விண்ணியலாளர்கள் விண்ணில் மனிதன் வாழக்கூடிய பிற கோள்களைக் கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்துவது தெரிகிறது.

இறைவனின் படைப்பில் மனிதனின் கண்டுபிடிப்புகள் துளியளவுதான். கண்டுபிடிக்காதவைகள் கடலளவுக்கு மேல் என்பது எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறதல்லவா!

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...

Amazing Oranges~~simply superb