வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த சட்டம் முழுமை பெறும்போது இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களாக மாறுவர். டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றும் இவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் ஓட்டுரிமை கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு அமைச்சர் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியன் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவின் ஒப்புதல் மத்திய காபினட் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் . பின்னர் பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் அங்கீகாரம் பெற்று முழுமை பெறும். ஓட்டு போட ரெடியாகுங்கள்: இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்; இந்த சட்ட முன்னேற்பாடு அனைத்து பணிகளும் தயாராகி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்வதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருக்க முடியும் என்றார்.படிப்பு மற்றும் பணி காரணமாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும் ஓட்டு பட்டியலில் பெயர் நீடித்து இருக்க சில சலுகைகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும் , வரும் லோக்சபா தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஓட்டு போட ரெடியாகுங்கள்! |
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...
Comments
Post a Comment