| ||
அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும். ஆரம்பகால பூஜை ஒரு காலத்தில் சபரிமலையில் தர்மசாஸ்தாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாள் மகரஜோதி அன்று மட்டும்தான் பூஜை நடந்தது. நிலக்கல் என்ற இடத்திலிருந்து பக்தர்கள் சென்று பூஜை நடத்தி வந்துள்ளனர். ஐயப்பன் தர்மசாஸ்தாவிடம் ஐக்கியமான பிறகுதான் மண்டல பூஜை, மகரவிளக்கு, மாத பூஜை என படிப்படியாக பூஜைகள் பெருகின. தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது. | ||
பாதுகாப்பாக வரும் கருடன் | ||
ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், ""நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும்'' என்றார்.
| ||
பம்பா தர்ப்பணம் | ||
பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப் படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார். | ||
பந்தளம் அரண்மனை உருவான ஆண்டு | ||
பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரதுமந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையிலிருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுபடுத்தினர். | ||
பஸ்மக்குள தீர்த்தம் | ||
ஐயப்பன் கோயிலில் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுவது பஸ்மக்குளம். ஒரு காலத்தில் இக்குளத்து நீர் தேங்காய் தண்ணீரை விட சுவையாக இருந்தது. இதில் பார்வை பட்டாலே பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. கூட்டம் அதிகமான பிறகு, இதன் பெருமை தெரியாமல் பக்தர்கள் இதன் கரையை கழிவறையாக்கி விட்டனர். தற்போது இக்குளம் ஓரளவு சீரமைக்கப்படிருக்கிறது. பக்தர்கள் தயவு செய்து இக்குளத்தை பாழ்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இக்குளத்தை தூரெடுத்து, தலையில் தண்ணீர் எடுத்து தெளிக்கும் அளவுக்கு மட்டும் வழிகளை அடைத்து விட்டால், இதன் பழம்பெருமை பாதுகாக்கப்படும். | ||
ஐயப்பன் வரலாறு காட்டும் தத்துவம் | ||
கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை. சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்பரமான அரண்மனை வாழ்வு.. இது நிலைத்ததா என்றால் இல்லை. தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கு கூட இந்த வாழ்வு நிலைக்கவில்லை என்றால் சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைத்துவிடுமா என்ன... எனவேதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எளிமையான ஏற்றத்தாழ்வற்ற சீருடை அணிந்து, ஒன்றுபோல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கிவிட்டு வருகிறோம். | ||
தியானத்தில் கவனம் | ||
ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு. |
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...
Comments
Post a Comment