Wednesday, December 22, 2010

மதுரையில் ஒரு சபரி




பரிமலையில் மகரவிளக்கு பூஜை கொண்டாடுவதைப்போல் மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயிலிலும் விழா கொண்டாடப்படுகிறது. புதுசாரி விஷ்ணு நம்பூதிரி என்பவர் பார்த்த தேவபிரஸ்னத்தின்படி இக்கோயில் கட்டப்பட்டது. 1980ல் சிருங்கேரி சாரதாபீட மடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் அடிக்கல் நாட்டினார். இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது.

கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது. கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.1986 ஜூலை 13ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கல்லூர் மாதவன் நம்பூதிரி கும்பாபிஷேகத்தை நடத்தினார். துவஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) ஜூன் 2001லும், நவக்கிரகங்கள் 2005லும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


இங்கு தினமும் கணபதிஹோமம் நடக்கிறது. ஐயப்பனுக்கு 3 முறையும், துர்க்காதேவிக்கு 2 முறையும் நம்பூதிரிகளால் பூஜை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழியில் சுத்திகலசம், எழுநெல்லிப்பூ, ஸ்ரீபூதபலி, பணி, உத்சவபலி, பள்ளி வேட்டை, ஆறாட்டு, அன்னதானம் ஆகியவை சபரிமலையைப் போலவே நடத்தப்படுகிறது. தற்போது உள்ள கோயிலை சீரமைத்து, சுப்ரமணியர், சிவன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு 45 லட்சம் ரூபாய் செலவில் சன்னதிகள் கட்டப்பட்டு 2007 ஜூலை 15ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அடுத்த கட்டமாக 60 லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுரம், தங்கும் விடுதி, தியான அறை, ஆடிட்டோரியம், கோயில் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட உள்ளது. தினமும் அன்னதானம், மருத்துவ உதவி, சமஸ்கிருத, திருக்குறள் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பணி தொடர்பாக, பொருளாளர், ஐயப்பா சேவா சங்கம், 175, விளாச்சேரி மெயின்ரோடு, முனியாண்டிபுரம், மதுரை 625 004 போன்: 0452-237 1870 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.



இருப்பிடம்:

மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து(6கி.மீ) விளாச்சேரி செல்லும் பஸ்களில், சவுராஷ்டிரா கல்லூரி ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment