Thursday, December 16, 2010

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்


பொய்கையாழ்வார்

பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம்.

பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

பேயாழ்வார்

பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம்

திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : ஊரின் பெயரைத் தன் பெயராகக் கொண்டவர், திருமாலின்ஆழி என்ற கருவியின் அம்சம்,

பெரியாழ்வார்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்

ஆண்டாள்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
பாடிய பாடல் : 173
சிறப்பு : கரும்பார் குழல் கோதை என்ற சிறப்பு பெயர் பெற்றவள், திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள்.

தொண்டரடி பொடியாழ்வார்

பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்
நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
பாடிய பாடல் : 55
வேறு பெயர் : விப்பிர நாராயணர்
சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

திருமங்கையாழ்வார்

பிறந்த இடம் : திருக்குறையலூர் (சீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில் லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில்திளைத்தவர்.

திருப்பாணாழ்வார்

பிறந்த இடம் : உறையூர் (திருச்சி)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம்.
நட்சத்திரம் : ரோகிணி (வளர்பிறைதுவிதியை திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : அமலனாதிபிரான்
பாடிய பாடல் : 10
சிறப்பு : திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்

குலசேகர ஆழ்வார்

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : திட விரதன்
எழுதிய நூல் : பெருமாள் திருமொழி : 105
சிறப்பு : மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.

நம்மாழ்வார்

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் சேனைமுதலிய அம்சம்


மதுரகவி ஆழ்வார்

பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
நட்சத்திரம் : சித்திரை, (வளர்பிறைசதுர்த்தசி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : கண்ணினுன் சிறுதாம்பூ
பாடல்கள் : 100
சிறப்பு : ஆழ்வாராயிருந்து இன்னொரு ஆழ்வாரைப் பாடிய பேறு பெற்றவர், நம்மாழ்வாரைப் புகழ்ந்தவர்.

No comments:

Post a Comment