Skip to main content

கவனிக்கவும்: காசோலைகளில் மாற்றங்கள்!




இதுவரையில் காசோலைகளில் மாற்றம் செய்தால் அந்த இடத்தில் உங்களுடைய கையொப்பம் இட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்ளும். இந்த விதி முறையில் இந்திய ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

வரும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து காசோலைகளில் நீங்கள் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்ய இயலும். வேறு இடங்களில் நீங்க மாற்றங்கள் செய்தால் அந்த காசோலை செல்லாது. அபராதமும் விதிக்கப் படலாம். எனவே காசோலை நிரப்பும் பொழுது கவனமாக இருங்கள்.

தங்களது சம்பளத்தை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!

தங்களது வருமானத்தை அடுத்தவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் சார்பில் 24 ஐரோப்பிய நாடுகளில் 19 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தங்களது சம்பளத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆண், பெண் என்ற பேதமின்றி இருபாலருமே இது போன்று ஒப்பிட்டுப் பார்ப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய பேராசிரியர் ஆன்ட்ரூ கிளார்க் என்பவர் கூறுகையில், "இது போல தங்களது வருமானத்தை மற்றவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் மகிழ்ச்சி குறைந்து விகுகிறது. சமச்சீர் அற்று இருப்பதாக ஒரு உணர்வு ஏற்பட்டு விடும். என்னைப் பொறுத்த வரை ஏழை மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக மட்டும் தான் சம்பாதிக்க நினைக்கின்றனர். ஆனால் பணக்காரர்கள் தான் திருப்தி அடையாமல், அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை பேராசிரியரும் நிறுவன உளவியல் நிபுணருமான காரி கூப்பர், "ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. அளவுக்கு அதிகமாக இவ்வாறு செய்வதால் எதிலுமே திருப்தி இல்லாமல் போய்விடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்துவிடும்" என்றார்.

பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் உள்ள மக்களே இது போல் ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

Amazing Oranges~~simply superb

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...