Saturday, December 18, 2010

தற்போதைய அறிவியல்- வளர்ச்சி


ந்த 2010-ஆம் ஆண்டு முழுவதும் பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. புதிய அறிவியல் கருத்துகள் உருவாக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சில முக்கியமானவற்றை பார்க்கலாம்.

செயற்கை மழை சாத்தியமே!



சுற்றுப்புறவியல் விஞ்ஞானிகள் 1940-ஆம் ஆண்டு முதலே செயற்கை மழை உருவாக்க முயன்று வந்தனர். அதில் இதுவரை முழுமையான வெற்றி என்பது கானல்நீராகவே இருந்து வந்துள்ளது. சில்வர் அயோடைடு வேதிப்பொருளை மேகங்களின் மீது வானில் தூவுவது, மிக அதிகமான பரப்பில் உலர் பனிக்கட்டித் துகள்களை தூவுதல், உப்புத் துகள்களை மேகங்களின் மீது தூவி மேகங்களைக் குளிரச் செய்து நீர்த் திவலைகளை உண்டாக் குவது போன்ற செயற்கை முறைகளே இது வரை கையாளப்பட்டு வந்த கண்டுபிடிப்பு கள் ஆகும். அதாவது மேகங்களில் நீராவி யாக இருக்கும் நீர்த் திவலைகளை குளிரச் செய்து நீர்த் துளியாக மாற்று வதற்கு ஏதேனும் ஒரு பொருள் தேவைப் படுகிறது. இந்த முறைகள் பகுதி வெற்றியையே தந்துள்ளது. ஆனால் முழுமையான வெற்றியைத் தரவில்லை.

தற்போது ஜெனீவா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக்குழு முற்றிலும் மாறுபட்ட புதிய நுட்பமான முறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அது லேசர் கதிர்களை பயன்படுத்தி மேகங்களை உண்டாக்கி மழை பொழியச் செய்வது. இதன் ஒரு பகுதியாக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வகங்களிலும், வான்வெளியிலும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது.

ஆய்வகத்தில், அதிக ஆற்றலை யுடைய வானிலிருந்து வரக்கூடிய, துணை அணுத்துகளான காஸ்மிக் கதிர்களை கண்டறியப் பயன்படும் மேக கலன் (கிளவுட் சேம்பர்) அல்லது அறையை உபயோகப்படுத்தினர். அதனுள் அதிக ஆற்றலுடைய துகள்களை செலுத் தும்போது, நீர்மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்களை விடுபடவைக்கிறது. இதனால் அது மின்னூட்டம் பெற்ற துகள்களாகி, ஒரு மெல்லிய தூசி போல செயல்பட்டு நீர்த் திவலைகளாக மாற உதவுகிறது என்பதை கண்டுபிடித்தனர்.

இவர்களைப் போலவே சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள், அதிக பலம் வாய்ந்த அகச் சிவப்பு லேசர் கதிர்களை கிளவுட் சேம்பர் (மேக அறை) உள்ளே செலுத்தும்போது கலன் - 240 சென்டி கிரேடாக அதன் வெப்பம் குளிர்ந்து நீராவி மேகம் உருவாகிறது. அந்த ஆய்வில் முதலில் 50 மைக்ரோ மீட்டர் விட்டமுடைய நீர்த் துளிகள் உருவாகி றது. அதன்பின் அடுத்த 3 நொடிகளில் அது 80 மை. மீ. விட்டமுடைய நீர் துளிகளாக மாறுகிறது. மேலும் லேசர் கதிர்களை வானில் செலுத்தும்போது நீராவி குளிர்வடைந்து நீர்த் துளிகளாக மாறுகிறது. இவ்வாறு குளிர்வடைவதை இரண்டாவதாக மற்றொரு லேசரைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு செயற்கை மழை உருவாக்குவதில் சாதனை செய்துள்ளனர்.

வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்



விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.

இதற்காக, விஞ்ஞானிகள் ஐந்து வகை யான வண்ணத்துப் பூச்சிகளை எடுத்து அதன் சிறகுகளின் முப்பரிமாண உள்ள மைப்பு ஏடுகளை அறிய ஷ் - கதிர் ஒளிச் சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் கைராய்டு எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பி லானது எனவும், இந்த கைராய்டுகள் கிரிஸ் டல்கள் (படிகம்) போல செயல்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்து கிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை இரு பரிமாண எலெக்ட்ரான் நுண்ணோக்கிகளை கொண்டு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த ஆய்வில் ஒரு உறுதியான முன்னேற்றமின்றி இருந்தது. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் சிறப்பாக காணமுடிகிறது. அதுசரி இந்த கைராய்டுக்கு வருவோம். இந்த கைராய்டு என்பது மின்விசிறியின் இலை போன்றது. தானாக பொருந்தக்கூடிய, நான்கு அடுக்கு களில் ஒன்று. இது நன்கு உறுதியான சிடின் என்னும் ஸ்டார்ச்சினால் ஆனதாகும். இந்த கைராய்டு அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் அமைந்துள்ள செல் ஏடு சவ்வானது வளர்ந்து செல்களின் உள்ளே மடித்து வைக்கப் படுகிறது. இந்த மடித்து வைக்கப்படும் சவ்வானது இரு கைராய்டுகளாக உருவாகிறது. வெளி மற்றும் உட்புற செல்களின் சவ்வு களானது இந்த இரு கைராய்டுகளையும் கண்ணாடி அமைப்புடைய வலைதளமாக மாற்றுகிறது. சிடின் வெளிப்புற கைராய்டில் சேமிக்கப்படுகிறது. இதனால் அது ஒரு திடப் படிகமாக மாறுகிறது.

பின்னர் அந்த செல் இறந்துபோவதால் ஒரு மிக நுண்ணிய அமைப்பினைக் கொண்ட ஒளி ஊடுருவும் தன்மையுடன் படிகம் உருவாகிறது. இந்த படிகம் போன்ற அமைப்பு ஒன்றை மற்றும் எதிரொளித்துவிட்டு ஒளியின் மற்ற எல்லா அலைநீளங்களையும் அதனுள் கடத்திவிடுகிறது.

கைராய்டின் அளவு நிறத்தை தீர்மானிக் கிறது. அதன் அமைப்பு சுருங்கும்போது நிறம் மங்கலாகவும் விரிவடையும் போது சிவப்பாகவும் மாறுகிறது. மேலும் பல நீண்ட காலம் நீடித்து நிலைக்கக் கூடியதும், மங்க லாகாததுமாகும் இதன் நிறம். இவ்வாறுதான் பட்டாம்பூச்சிகள் நிறத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பண்பினால், ஒற்றை கைராய்டுகள் நுட்பத்தை கண்ணாடிகளிலும் சூரிய ஆற்றல் சேமிக்கும் தொழில்நுட்பத்திலும் பயன் படுத்தலாம். இதே நுட்பத்தை சிறந்த கண்ணாடி பொருள்கள் தயாரிப்பிலும், மிகச்சிறந்த சோலார் செல்கள் உருவாக்குவதிலும் பயன் படுத்தமுடியும்.

வியாழனின் சிவப்பு புள்ளி

வியாழன் கிரகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் மிகப்பெரிய சிவப்பு புள்ளி. இது நீள்வட்ட வடிவில் சுழலும் புயல் போன்ற புள்ளியாகும். இது வியாழனின் மத்தியரேகைக்கு தென்புறம் 220 பாகையில் அமைந்துள்ளது. பல்லாண்டு பழமையான இந்தச் சிவப்பு புள்ளியை 19-ஆம் நூற்றாண்டு முதல் வானவியலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்தப் புள்ளி யானது பூமியைப் போன்று மும்மடங்கு கோள்களை தன்னுள் அடக்கவல்லது.

இது கடிகாரத் திசையின் எதிர் திசை யில் அதாவது வலமிருந்து இடமாக, 6 நாட்கள் இடைவெளியில் சுழன்று வருகின்றது. இதனை புவியின் பரப்பி-ருந்து 12 செ. மீ. (அ) அதிகமான உருவாக்கத் திறன் கொண்ட தொலைநோக்கியைக் கொண்டு காண இயலும்.

சிவப்பு புள்ளியைப் பற்றிய ஆராய்ச்சி பல வருடங்களாக நடந்துவந்த போதி லும், அதனுடைய உண்மையான அமைப் பைப் பற்றி கண்டறியப்பட்டிருக்கவில்லை. அதனுள் நிலவும் தட்ப வெப்பநிலையைப் பற்றி அறிய முடியாவிட்டாலும், அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் காலநிலை மாற்றங்களைப் பற்றி அறிய முனைந்தனர். மேலும் புள்ளியின் நிறமானது அவ்வப் போது மாறுவதை பதிவு செய்தனர். ஆனால் எதனால் இவ்வகை நிற மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது தெளிவாக விளங்கவில்லை.

வியாழனின் மேற்பரப்பிலிருந்து கந்தக மூலக்கூறுகள் இந்தச் சூழலினால் மேலெழுப்பப்பட்டு, அது புற ஊதாக் கதிர்களினால் உடைக்கப்படுவதால் உருவாகும் புதிய கந்தக அணுக்களால் நிறம் மாறுவதாக ஒரு கருத்து வானவியலர் களிடையே நிலவிவந்தது. ஆனால் இப்போது தொலைநோக்கி மூலம் ஆராயப்பட்ட வியாழனின் மிகப்பெரிய சுழலும் புள்ளியும், அதன் காலநிலை வரை படங்களும் முற்றிலும் மாறுபட்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறது. புகைப்படங்கள் காலநிலை மற்றும் அதன் வெப்பநிலை மாற்றங்களை பதிவு செய்தது. வெப்பக் காற்றின் சுழல்களும், அதனுள் குளிர்ந்த பகுதிகளையும் சிவப்பு புள்ளியில் இருப்பதைக் காட்டியது நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்.

ஜப்பானின் தேசிய வானவியல் ஆராய்ச்சி மையம் அகச்சிவப்பு கதிர் தொலைநோக்கி யைக் கொண்டு நிறம், காற்றழுத்தம் ஆகிய வற்றையும், அதன் வெப்பம் மிகுந்த பகுதி, சுற்றுபுறத்தைவிட 340 செ. அதிகம் இருப்ப தைக் காட்டியது.

நிலவில் நீர், உறுதி செய்த விதம்.

நாசாவினுடைய LCROSS எனப்படும் லூனார் அப்செர்வேசன் மற்றும் சென்சிங் செயற்கைக்கோள் (Lunar Crater observation and Sensing Statellite) நிலவில் நீர் இருப்பதை இவ் வாண்டு நவம்பர் 13-ஆம் தேதி உறுதிசெய்தது.

அமெரிக்காவின் நாசா 2009, ஜூன் 18-ஆம் தேதி நிலவினை ஆராய விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் L CROSS மற்றும் LRO (லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர்) ஆகிய இரண்டும் இணைந்தவை.

L CROSS விண்கலமானது சென்டார் எனும் உயர்ரக ராக்கெட்டுடன் பொருத்தப்பட்ட தாகும். விண்ணில் சென்று புவியை ஒரு சுற்றுப் பாதையில் வலம் வந்து LRO விலிருந்து பிரிந்து நிலவின் பரப்பில் சென்று மோதுவதற் கான ஆயத்தங்களை செய்தது. பின்னர் நிலவை அதன் மிகக் குறைந்த தொலைவில் வலம் வந்து சென்டார் எனும் ராக்கெட்டும், L CROSS ம் இருவேறு பாகங்களாக பிரிந்தது.

பொதுவாக L CROSS இருவகையான நிறமாலைமானிகளை கொண்டுள்ளது. ஒன்று அகச்சிவப்பு நிறமாலைமானி மற்றொன்று புறஊதா நிறமாலைமானி.


இருவேறு பாகங்களாக பிரிந்ததில், ராக்கெட்டானது ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தில் பயனித்து நிலவின் மேற்பரப்பில் மோதியது. இந்த மோதலினால் அதன் பரப்பில் மேலெழும்பிய புழுதி துகள்களின் தெறிப்பினை அதனை தொடர்ந்து வந்த L CROSS-ன் நிறமாலைமானியானது ஆராய்ந்தது. மோதல் நிகழ்ந்த 15 நிமிடத்தில் புழுதியானது 6 முதல் 8 கி.மீ. வரை பரவியது.

L CROSS - நிலவின் பரப்பை தொடும் வரையான சுமார் 4 நிமிட நேர இடைவெளியில் புழுதி யின் துகள்களை நிறமாலைமானி பதிவு செய்தது.

சென்டார் மோதலினால் ஏற்பட்ட புழுதி துகளானது இருவேறு பாகமாக பிரிக்கப் பட்டது. அதன் மேல்பாகம் நுண்ணிய தூசுத் துகள்களையும், ஆவி நிலையிலுள்ள துகள் களையும் கொண்டது. அதன் அடிப்பாகத் தில் கனமான துகள்களைக் கொண்டது.

L CROSS-ன் அகச்சிவப்பு நிறமாலைமானி நீராவியின் 1.4 முதல் 1.85 மைக்ரான் அலை நீளமுள்ள உட்கவர் பட்டைகளை பதிந் தனுப்பியது. அதன் புற ஊதா நிறமாலை மானி 309 நானோ மீட்டர் புற ஊதாக் கதிர் உமிழ்வுகளை பதிவு செய்து அனுப்பியது. இது சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர் வீச்சினால் நீர் மூலக்கூறு உடைந்து ஹைட் ராக்ஸிஸ் (OH) மூலக்கூறு உருவாக்கப்பட்டதன் அறிகுறியாகும். நிலவின் மேற்பரப்பில் நிழல்படிந்த பகுதியில் நீர் இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்தின.

இதற்கு முன்பே இந்தியாவின் சந்திர யான்- 1 நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று.

காமா கதிர் வெடிப்பு மிகத் தொலைவிலுள்ள பால்வீதியில் காமா கதிர் வெடிப்பு மிக அதிக ஆற்றலு டன் நிகழ்ந்து காமாக் கதிர்களை வெளியிடு கிறது. இவ்வகை வெடிப்புகள்தான் மிக அதிக ஒளிரும் தன்மையுடைய வெடிப்பு களாகும். மிக அதிகமான நட்சத்திரக் கூட்டங்கள் அணு எரிசக்தியின்றி போவதே இது நிகழக் காரணம். முந்தையக் காலங்களில் அண்டங்களிலுள்ள கூட்டமான நட்சத்திரங் களில் அதன் எரிசக்தியான ஹைட்ரஜன் மற்றும் ஹீ-யம் தீர்ந்துவிடுவதால் திடீரென இறந்து போகின்ற நட்சத்திரங்களின் நிகழ்வு தான் தற்போதைய அண்டக் கொள்கைக்கு ஆதாரம்.

அறிந்த காமா கதிர்வெடிப்பு எதுவென்றால், மிக குறுகிய ஒளிக்கற்றையாலான, அடர்ந்த, சூப்பர் நோவா நிகழ்வின்போது வெளியிடப் படுகிற ஒளிக் கதிர்வீச்சு. இது திடீரென சுழலக்கூடியதும், மிக அதிக நிறையிலான நட்சத்திரம் சிதைந்து கரும் புள்ளி ஏற்படுகிற நிகழ்வாகும்.

சுமார் 13000 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் ஒரு நட்சத்திரம் சிதைந்து கரும் புள்ளியாக மாறியதை சமீபத்தில் வானவியலர்கள் படம் பிடித்தனர். அதற்கு GRB 090423 என்று பெயரிட்டுள்ளனர். அதாவது அதன் கண்டுபிடிப்பு நிகழ்ந்த தேதியை அதன் பெயராக இட்டுள்ளனர். இதனையே மிகத் தொலைவில் நிகழ்ந்த காமாக் கதிர் வெடிப்பு எனலாம்.

காமாக் கதிர் வெடிப்பின் நிகழ்வுகளை நாசாவின் ஸ்விப்ட் செயற்கைக்கோள் ஏப்ரல் 2009-இல் கண்டுபிடித்தது. அது கண்டு பிடித்த மூன்று மணி நேரத்திற்குள் அதே இடத்தில் அகச் சிவப்பு கதிர்களை இங்கிலாந் தின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அகச் சிவப்பு கதிர் தொலை நோக்கி (VKIT) பதிவு செய்தது. மிகப்பெரிய நட்சத்திரமானது உடைந்து, மிகக் குறுகிய நேரம் நீடிக்கக்கூடிய, வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளி தெறிப்புகளை உண்டாக்குகிறது. இதனை புவியிலிருந்து தொலைநோக்கிகள் மூலம் காணலாம்.

ஸ்விப்ட் செயற்கைக்கோள்தான் முதன் முதலில் காமாக் கதிர் வெடிப்பு கண்டறிய பயன்படும் பல அலைநீள கண்காணிப்பான் ஆகும். இதனுள் அமைக்கப்பட்ட மூன்று கருவிகள் இணைந்து காமா கதிர் வெடிப்பு மற்றும் அதன் பின்னர் நிகழும் ஒளித்தெறிப்பு, X- கதிர்கள் புற ஊதாக் கதிர்கள், ஒளி அலை பட்டைகள் போன்றவற்றை அறிய உதவும்.

இதுபோன்ற தொலைவில் உள்ள நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடிப்பது, அண்டம் எவ்வாறு உருவானது என்பதை அறிய வழி பிறக்கும். இந்த ஏதஇ 090423 கண்டுபிடிப்பானது, பெருவெடிப்பு நிகழ்ந்த மிகக் குறுகிய காலத்திற்குள் உருவானதாக கருதப்படும் நட்சத்திரங்கள்தான் முதல் தலைமுறையை சேர்ந்தவை என்ற கூற்றை பொய்யாக்குகிறது. மேலும், நட்சத்திரங் கள் பெரும் வெடிப்புக்கு முன்னரே தோன்றியும் அழிந்தும் இருக்கக் கூடும் என்ற உண்மை தெரிய வருகிறது.

டைனோசரின் நிறம் டைனோசரை வெள்ளித் திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். அவை நிஜமல்ல. கணினியின் உதவியால் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் உருவங்கள். உண்மையில் டைனோசரின் உண்மையான நிறம் எதுவென்று யாருக்கும் தெரியாது. கடந்த இரு நூற்றாண்டுகளாக டைனோசர் எதைப்போன்று இருக்கும் என்பதை கற்பனையில் உருவாக்கப் போராடிக் கொண்டிருந்தனர். அதன் உருவம், எடை மற்றும் நகரும் விதம், ஒலி எழுப்பும் முறை ஆகியவை தற்போதைய உடற் கூறுவியல் மற்றும் விலங்கியல் போன்றவற்றின் அடிப்படையிலேயே உருவாக் கப்பட்டன. டைனோசரின் தோற்றம் மற்றும் நிறம் தற்காலம் வரை அறியப்படாத ஒன்றாகவே விளங்கியது.

தற்போது டைனோசரின் படிவங்களில் நிறமிகள் உள்ளதை ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். இது பண்டைய விலங்கு களின் உண்மையான நிறங்களை அறிய புதிய வாயிலை திறந்துள்ளது. மேலும் உண்மையான நிறமுள்ள மாடல் டைனோசர்களின் மறுஉருவாக்கத்திற்கும் அடித்தளமிட்டுள்ளது. சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் புசெங் ஷாங் என்பவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட குழுவானது முதன்முறையாக இதனை கண்டுபிடித்து வெளியிட்டது. வடகிழக்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பெற்ற பறவைகள் மற்றும் டைனோசர்களின் படிமங்களில் மெல்லிய நுண்ணிழை போன்ற நிறமிகள் கொண்ட உறுப்புகள் அதன் இறகுகளில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது மெலனோ சோம்பிகள் என அழைக்கப்படுகிறது.

இது தற்போது வாழும் பறவைகளின் இறகுகளிலும் இருப்பதை உறுதி செய்துள் ளனர்.

சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த டைனோசர்களின் உடலில் திட்டுத் திட்டாக கருப்பு வெள்ளை நிறமிகள் இருந்ததாகவும், அதன் இறகுகள் ஆரஞ்சு மற்றும் மரக்கலராக காணப்பட்டது எனவும் கண்டறிந்தனர். அதே பகுதியில் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வைகளில் வெள்ளை, ஆரஞ்சு, மரகலர் கோடுகள் அதன் வால் பகுதியில் மாறிமாறி காணப்பட்டதாகவும் கண்டறிந்துள்ளனர்.

மெலனோசோம்கள் எனும் நிறமி பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது. எனவே பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந் திருக்கலாம். அதனால் அது அதன் உண்மையான நிறத்தை வெளிப்படுத்தாது என்ற மாற்றுக் கருத்து இருப்பினும், நிகழ் காலத்தில் வாழ்ந்து கொண்டி ருக்கும் பறவைகளில் அதே அளவும், அமைப்பும் உள்ள நிறமிகள் இருப்பது மாற்றுக் கருத் தின் உண்மை தன்மையை தள்ளு படி செய்துவிடுகிறது.

1 comment:

  1. புதிய இனிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete