சிகாகோ: நமது நட்சத்திரக் கூட்டத்தில் மட்டும் கோடிக்கணக்கான பூமிகள் இருக்க வேண்டும், அவற்றில் நம்மைப் போன்ற முதிர்ச்சி அடைந்த மனித இனம் இருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது என்கிறார் ஆலன் பாஸ் என்ற அறிஞர். அமெரிக்காவில் உள்ள கார்நெகி அறிவியல் கழகத்தின் ஆலன் பாஸ் தர்க்க ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் கிடைத்த சில கருதுகோள்களை வைத்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் கூட்டத்தில் பேசுகையில் இத்தகவலை அவர் வெளியிட்டார். "மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால்கூட நமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் 300-க்கும் மேற்பட்ட கிரகங்களைத்தான் பார்க்க முடிந்தது. இவற்றில் வெகு சிலவற்றில்தான் ஏதாவது ஒரு வகை உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறது. பெரும்பாலானவை வாயுக்கள் நிரம்பிய கிரகங்கள்தான்.இந்த கிரகங்கள் தங்களுடைய தாய்கிரகமான நட்சத்திரங்களை மையமாக வைத்தே சுற்றி வருகின்றன. அந்த நட்சத்திரங்கள் இன்னமும் கொதிப்பு அடங்காத நெருப்புக்கோளங்கள். அந்த நட்சத்திரங்களுக்கு அருகில் செல்லும் கிரகங்களில் எந்தவகை உயிரினங்களும் இருப்பதற்குச் சாத்தியம் இல்லை. ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, சூரிய குடும்பத்தைச் சாராத கிரகங்களின் எண்ணிக்கை, அமைப்பு ஆகியவற்றை ஆராயும்போது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நம்முடைய பூமியைப் போல குறைந்தது ஒரு துணை கிரகமாவது இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான பூமிகள் இருக்க வேண்டும். இவையெல்லாம் உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்றவையாக இருக்கும் என்பது மட்டும் அல்ல, இவற்றில் உயிரினங்கள் இப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு நிறைய சாத்தியம் இருக்கிறது. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகை பிற பூமிகளில், 300 கோடி அல்லது 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே நமது பூமியில் இருந்ததைப் போன்ற ஜீவராசிகள் -அதாவது பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் இருப்பதற்கு சாத்தியம் அதிகம். பூமியில் உள்ள மனிதர்களைப் போலவே அறிவு முதிர்ச்சி உள்ள மனித இனங்கள் பிற கிரகங்களில் எத்தனை இருக்கும் என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்திய கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் இருக்கும் என்ற பதில் அப்போது கிடைத்தது' என்கிறார் ஆலன் பாஸ். |
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...
Comments
Post a Comment