Skip to main content

வானமும் பூமியும் (1)


ஓன்றுமில்லாத நிலையிலிருந்து ஒன்று உருவாதல்

இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது - அது எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது - அதன் ஒழுங்கையும் அதன் செயல்பாட்டையும் எந்த கணித சட்டம் (law) கட்டுப்படுத்துகிறது போன்ற தலைப்புகள் மிகவும் சுவாயானவை. விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் இவற்றை தீவிரமாக சிந்தித்து பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர். 20ம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் அதன் நிறை மற்றும் அளவில் எல்லயற்றது என்றும் அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்றும் நினைத்தார்கள். ஆகவே இதை 'நிரந்தர பிரபஞ்ச திட்டம்' என்று அழைத்தனர்.

நாத்திக தத்துவங்களுக்கு அடித்தளமிட்ட இந்த கோட்பாடு இறைவனை மறுத்ததோடு பிரபஞ்சம் நிலையான உறுதியான மாற்றமடையாத பொருட்களின் குவியல்களால் ஆனது என்று வாதிட்டது.

நாத்திகமானது சிந்தனையானது பொருள் நிரந்தரமானது என்றும் பொருளை தவிர்ந்து வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று வாதிடக்கூடிய சிந்தனையாகும். அது பண்டைய கிரேக்க தத்துவங்களோடு ஆரம்பித்த போதிலும் 19 நூற்றாண்டில் தான் பிரபல்யம் அடைந்தது. இது கார்ள் மாக்ஸின் தத்துவங்களால் பிரபல்யம் அடைந்தது.

நாம் முன்பு கூறியதை போன்றுஇ 19 நூற்றான்டின் நிரந்தர பிரபஞ்ச திட்டம் தான் நாத்திகத்திற்கு அடிதளமிட்டது. ஜோர்ஜ் புலிட்சர் அவரது பிரின்ஸிப்ஸ் பொண்டமென்டக்ஸ் த பிலோஸோபே என்ற புத்தகத்தில் பிரபஞ்சம் படைக்கப்பட்டவில்லை என்று வாதிடுகிறார்:

ஆகவே இறைவன் ஒன்றும் இல்லாத ஒரு நிலையிலிருந்து பிரபஞ்சத்தை உடனடியாக படைத்திருக்க வேண்டும். படைக்கப்பட்டது என்று ஏற்று கொள்வதற்கு முன்னர் பிரபஞ்சம் இல்லாத அந்த நிலையை ஏற்று கொள்ள வேண்டும். அதாவது ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து ஒன்று உருவானது என்பதை ஏற்று கொள்ள வேண்டும். இந்த நிலையை விஞ்ஞானம் ஏற்று கொள்ளாது.

புலிட்சர் ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து பிரபஞ்சம் படைக்கப்படவில்லை என்று வாதிட காரணம் அவர் 19 நூற்றாண்டின் நிரந்தர பிரபஞ்ச திட்டத்தை நம்பியதுடன் அவர் விஞ்ஞான அடிப்படையில் விளக்கமளிப்பதாகவும் நினைத்துக்கொண்டார். ஆனால் 20 நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த விஞ்ஞானமும் தொழிநுட்பமும் நாத்திகத்திற்கு ஆதாரமாக விளங்கிய நிரந்தர பிரபஞ்ச திட்டத்தை அழித்துவிட்டது. இன்று 21நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன பௌதீகவியல் பல ஆராய்ச்சிகள் கண்காணிப்புகள் மற்றும் கணித கணிப்பீடகளை கொண்டு பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருந்தது என்றும் அது ஒரு பெரும் வெடிப்பை கொண்டு ஒன்றுமில்லாத நிலையிலிருந்து படைக்கப்பட்டது என்றும் நிரூபித்துள்ளது.

பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருந்தது என்பதன் பொருள் பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து உருவாக்கப்பட்டது, அதாவது அது படைக்கப்பட்டது என்பதாகும். படைக்கப்;பட்ட பொருள் ஒன்று இருக்குமானால் (படைக்கப்படுவதற்கு முன்னால் அது இருந்திருக்காது) கண்டிப்பாக அதை படைத்தவன் இருக்க வேண்டும். ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து ஒன்று உருவாக்கப்படுவதை மனித மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. (மனிதனால் அதை புரிந்து கொள்ள முடியாது காரணம் அந்நிகழ்வு நடைபெறும் போது அவன் இருக்கவில்லை). அதனால் ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து ஒன்று உருவாக்கப்படுவதற்கும் பல பொருட்களை சேர்த்து ஒரு புதிய பொருளை (கலை மற்றும் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள்) உருவாக்குவதற்கும் இடையே பெரும் வேறுபாடு இருக்கிறது. அவை அனைத்தும் எவ்வித முன்னுதாரணங்களும் இன்றியும் அவை படைப்பதற்கான நேரம் மற்றும் இடம் இல்லாத ஒரு நிலையிலும் ஒரேஒரு பொழுதில் அனைத்தும் சீராக படைக்கப்பட்டது அல்லாஹ{வின் அத்தாட்சியும் வல்லமையுமாகும்.

ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து பிரபஞ்சம் உருவானது என்பது படைக்கப்பட்டதற்கான பெரும் சான்றாகும். இந்த உண்மைகளை சிந்திப்பதால் பல மாற்றங்கள் ஏற்படும். இவை மனிதனுக்கு அவனது வாழ்வின் அர்தத்தை புரிய வைப்பதுடன் அவனது குறிக்கோள்களையும் சிந்தனைகளையும் மறுபரிசீலனை செய்யும். எனவேதான் பல விஞ்ஞான சமூகங்களுக்கு இந்த படைப்பு சம்பந்தமான உண்மைகள் தெளிவாக தெரிந்திருந்தும் அவற்றை நிராகரிக்கின்றனர். உண்மை என்னவென்றால் அனைத்து விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளும் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை சுட்டிக்காட்டுவதால் மனிதர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தகூடிய மாற்று கொள்கைகளை உருவாக்க தூண்டப்படுகிறார்கள். இருப்பினும் விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் இத்தகைய கோட்பாடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

நாம் பிரபஞ்சம் தோன்றிய விதம் பற்றிய விஞ்ஞான கருத்துகளை பார்போம்.

விரிவடையும் பிரபஞ்சம்

1929 ஆண்டு கலிபோனியாவிலுள்ள மவுண்ட் வில்சன் ஆராய்ச்சி மையத்தில் எட்வின் ஹப்பல் என்ற அமேரிக்க வானவியல் விஞ்ஞானி வானவியல் வரலாற்றில் மிகப்பெரும் கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்தார். அவர் மிகப்பெரும் தொலை நோக்கியினூடாக நட்சத்திரங்களை கண்காணித்து கொண்டிருக்கும் போது, அவற்றின் எல்லையின் இறுதியில் நிறம் சிகப்பாக மாறுவதை கண்டார். அதாவது நட்சத்திரம் பூமியிலிருந்து விலகி செல்வதற்கான அறிகுறியாகும். இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காரணம் பௌதீகவியலின் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் பார்க்கும் திசையை நோக்கி வரும் ஒளிக்கதிர்கள் ஊதா நிறமாக இருந்தால் அது அந்த திசையை நோக்கி வருவதாகவும் மாறாக ஒருவர் பார்க்கும் திசையை நோக்கி வரும் ஒளிக்கதிர்கள் சிகப்பு நிறமாக இருந்தால் அது அந்த புள்ளியை விட்டடும் வலகி செல்வதாகவும் பொருள்படும். ஹப்பள் கண்காணித்து கொண்டிருக்கும் போது நட்சத்திரத்திலிருந்து சிகப்பு நிற ஒளி வந்தன. இதன் கருத்து அவைகள் தொடர்ந்து எம்மை விட்டும் விலகி செல்கின்றன.

அதன் பிறகு ஹப்பள் மற்றொரு முக்கியமான ஒன்றை கண்டுபிடித்தார்: நட்சத்திரங்களும் பால்வெளிமண்டலங்களும் எம்மை விட்டு மாத்திரம் விலகி செல்லவில்லை. ஒவ்வொன்றும் மற்றயதிலிருந்து விலகி செல்கின்றன. இவ்வாறு பிரபஞ்சத்தில் ஒன்று மற்றயதிலிருந்து செல்வதானால் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற முடிவிற்கு வரலாம்.

இதை மேலும் தெளிவாக புரிந்து கொள்ள பலூன் ஒன்றுடன் ஒப்பிடலாம். பலூன் ஊதப்படும் பொழுது அது விரிவடைகிறது. அதை போன்று பிரபஞ்சம் விரிவடைவதன் காரணமாக அதிலுள்ள ஒவ்வொன்றும் விலகி செல்கின்றன.

இதற்கு முன்பாகவே இந்த உண்மை தத்துவரீதியாக கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியாக எல்லோராலும் ஏற்றுக்கோள்ளப்பட்ட ஆல்பட் ஜன்ஸ்டின் பௌதீகவியலிலுள்ள சட்டத்தின் அடிப்படையில் பிரபஞ்சம் நிலையாக இருக்க முடியாது என்ற உண்மையை கண்டுபிடித்தார். இருப்பினும் அவரது காலத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர பிரபஞ்ச திட்டதிதோடு மோத விரும்பாமல் அவரது கண்டுபிடிப்பை கைவிட்டார்;. பிற்காலத்தில் ஜன்ஸ்டின் அவரது இந்த செயலை 'அவரது வாழ்வின் மிகப்பெரும் பிழை' என்று கூறி வருத்தப்பட்டார். ஹப்பளின் கண்டுபிடிப்பின் காரணமாக பிரபஞ்சம் விரிவடைகிறது உண்மை உறுதியானது.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற உண்மை பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்ற கருத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது ?

விரிவடைந்து செல்லும் பிரபஞ்சம் காலத்தால் பின்னோக்கி சென்றால் அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உருவானது என்பதை சுட்டிக்காட்டும். இந்த இடத்தில் தான் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் ஒன்றுசேர்ந்து இருந்தது. மேலும் அது பூஜ்ஜிய நிலையிலும் (
zero volume) கணக்கி முடியாத திண்மமாகவும்) இருந்திருக்க வேண்டும். பூஜ்ஜிய நிலையிலுள்ள ஒரு இடத்தில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக பிரபஞ்சம் தோன்றியது. பிரபஞ்சம் தோன்ற காரணமாக இருந்த வெடிப்பு 'பெரும் வெடிப்பு' என்றும் அதன் கோட்பாடு 'பெரும் வெடிப்பு கோட்பாடு' என்றும் அழைக்கப்படுகிறது.அதன் நிலையை விளக்கவே 'பூஜ்ஜியமா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்றுமில்லாத நிலை என்பதை விஞ்ஞானம் பூஜ்ஜிய நிலை என்று அழைக்கிறது. உண்மையில் 'பூஜ்ஜிய நிலை' என்பது 'ஒன்றுமில்லாத நிலை'யாகும். பிரபஞ்சம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உருவானது. வேறுவகையில் கூறுவதானாலஇ பிரபஞ்சம் படைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் ஒரு பொருளாக இருந்து பிறகு அவை வெடித்து பிரிந்தது என்பது பெரு வெடிப்பு கோட்பாடகும். இந்த பெரு வெடிப்பு உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தை பற்றி சிறிதளவு அறிந்திருந்த மக்களுக்கு அருளப்பட்ட குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (ஸூறா அன்பியா : 30)

மேலே கூறப்பட்ட வசனத்தில் வானங்கள் பூமிகள் அடங்கலாக அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்னால் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டு இருந்தது. பிறகு பெரு வெடிப்பின் காரணமாக அவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து செல்வதன் மூலம் தற்போதய பிரபஞ்சம் உருவானது.

மேலுள்ள வசனத்தை பெரு வெடிப்பு கோட்பாடுகளோடு ஒப்பிடும் போது அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்து போகிறது. ஆனாலும் பெரு வெடிப்பு கோட்பாடு 20 நூற்றாண்டில் தான் விஞ்ஞான தத்துவமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற உண்மையானது பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து உருவானது என்பதற்கான சான்றாகும். 20ம் நூற்றாண்டு வரை இந்த உண்மையை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.: ஆனால் அல்லாஹ் இந்த உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் அறிவித்துவிட்டான். மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்¢ நிச்சயமாக நாம் விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம் (ஸ_றா அத்தாரியாத் : 47)

பெரும் வெடிப்பு கோட்பாடுக்கு மாற்றீடாக வேறு கோட்பாடுகளை தேடுதல்

பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து படைக்கப்பட்டது என்பதை பெரு வெடிப்பு கோட்பாடு நிரூபித்தது. வேறுவகையில் கூறுவதானால் அது அல்லாஹ_வால் படைக்கப்பட்டது. இந்த காரணமாக தான் நாத்திக சித்தாந்தத்தால் கவரப்பட்ட வானவியல் விஞ்ஞானிகள் பெரு வெடிப்பை நிராகரித்து நிரந்தர பிரபஞ்ச திட்டத்தை ஆதரித்தனர். நாத்திக தத்துவத்தை ஆதரித்த பௌதீகவியளாளர் ஏ. எஸ். எடிங்டன் காரணங்களை இவ்வாறு விளக்குகிறார்.

கோட்பாடு ரீதியாக, பிரபஞ்சம் திடீரென உருவானது என்ற கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.பெரு வெடிப்பு கோட்பாட்டால் கவலையடைந்தவர்களில் சர் பிரட் ஹொய்ல ஒருவர். நூற்றாண்டின் நடுப்பகுதியில்

, 19 நூற்றாண்டின் நிலையான பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய நிரந்தர பிரபஞ்ச திட்டத்திற்காக ஹொய்ல் கடுமையாக போராடினார். பிரபஞ்சம் அளவில் எல்லையற்றதும் ஆயுளில் நிரந்தரமானது என்பது நிரந்தர பிரபஞ்ச திட்டத்தின் கருத்தாகும். இயற்கை தத்துவத்தை ஆதரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இக்கோட்பாடானது பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் உண்டு என்று வாதிடக்கூடிய பெரு வெடிப்பு கோட்பாடுக்கு எதிரானதாகும்..

நிரந்தர பிரபஞ்ச திட்டத்தை ஆதரித்தவர்கள் பல காலமாக பெரு வெடிப்பு கோட்பாட்டை கடுமையாக எதிர்தார்கள். ஆனால் விஞ்ஞானம் அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டது.

சில விஞ்ஞானிகள்
, மறுபுறத்தில் வேறு கோட்பாடுகளை உருவாக்க முயன்றனர்.

1948 ஆண்டு ஜொர்ஜ் கமாவ் பெரு வெடிப்பு சம்பந்தமாக வேறு யோசனைகளை முன்வைத்தார். பெரு வெடிப்பின் காரணமாக பிரபஞ்சம் உருவான பின்னர் இ பெரு வெடிப்பின் காரணமாக பிரபஞ்சத்தில் மேலதிக கதிரியக்கம் எஞ்சியிருக்க வேண்டும் என்றார்.

'எஞ்சியிருக்க வேண்டும்' என்று கூறப்பட்ட சான்றுகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. ( தொடரும்.... )

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

Amazing Oranges~~simply superb

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...