Friday, December 17, 2010

நினைத்தாலே நடக்கும்!





வரப் போகிறது அடுத்த கட்ட தொழில் நுட்பம்! இதை பற்றி பார்க்கும் முன் ஒரு நிகழ்வை பற்றி பார்ப்போம்!

சமீபத்தில் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஓர் அலுவலகத்திற்கு சென்று இருந்தார் ஒரு பத்திரிக்கையாளர். வாசலில் அவர் தலையில் ஒரு ஹெட் போன் ஒன்றை மாட்டி அனுப்பினார் காவலாளி.

கதவை திறக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சென்றவருக்கு கதவு அதுவாகவே திறந்து வழி விட்டது. கொஞ்சம் பயத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, FAN சுவிட்ச் எங்கேவென்று தேட தொடங்கினார். அவர் நினைத்த மறு கணமே FAN ஓட துவங்கியது!

என்னடா இது? ..எல்லாம் நினைத்த மாத்திரத்திலே நடக்கிறது என திகைத்து போன அவருக்கு அந்த நிறுவனத்தை சேர்ந்த ஏரியல் கார்ட்டன்(ARIEAL CARTAN) என்கிற உளவியல் நிபுணர் ,"ஆமாம் ....இது சாத்தியம் என்று பேச தொடங்கினார்.

இது போன்ற சின்ன சின்ன வேலைகளை இருந்த இடத்தில இருந்தே அதுவும் மனதில் நினைத்தாலே போதும் ...அது நடக்கும்" என்று சொல்லும் போது நமக்கும் ஒரு சின்ன ஆச்சிர்யம் மற்றும் ஒரு ஆர்வம் தோற்றக் கொள்ள தான் செய்யும்.

அந்த டெக்னாலஜி பற்றி பர்ர்போம் ..."எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும் போது பீட்டா (beta waves ) அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது, ஓய்வு மூடுக்கு வரும் போது ஆல்பா அலைகளை (ALFA WAVES ) உருவாக்குகிறது.இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக சுவிட்ச் இல்லாமலே லைட் போடலாம் ...இசை கேட்கலாம். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!

நம் காதில் இருக்கும் ஹெட் செட்டில் இருக்கும் சில ஏலேக்ட்ரோடுகள் நம் எண்ண அலைகளைப் படிக்கின்றன.அந்த வாசிப்புகள் கணினிக்கு அனுப்பி அதை ப்ரோசெச்ஸ் செய்து சுவிட்ச்களுக்கு கட்டளைகளை அனுப்புகின்றன.இதன் மூலம் நம் எண்ணங்கள் செயல்படுத்துகின்றன ..

ஆனால், இது இப்போது தொடக்க நிலையில் உள்ள ஆராய்ச்சி! இப்போதைக்கு இது போன்ற விஷயங்கள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த கட்ட நிலைகள் மிக விரைவில் வரும் என்று ஆய்வாளர் கூறியுள்ளார் ....

மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே மிகப் பெரிய விஷயம். ஆனால் இதனால் ஏற்படும் பாதகமான அம்சங்கள் பற்றி இங்கே சொல்ல வேண்டாம் ஒவ்வொரும் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment