Skip to main content

Posts

Showing posts from December, 2010

இவர் தான் சனீஸ்வரன்

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்... தப்பு செய்துவிட்டு சக்தி தேவியிடம் ஓடினால் தாய் பாசத்தோடு அணைத்துக் கொள்வாள். சிவன் தலையில் இரண்டு குட்டி குட்டி சேர்த்துக் கொள்வார். மாயக்கண்ணன், ஏதாவது கள்ளத்தனம் செய்து சிறிதளவு சோதிப்பதோடு நிறுத்திக் கொள்வான். ஆனால், இந்த சனீஸ்வரன் இருக்கிறாரே... கடவுளாக இருந்தாலும் கூட தன் வேலையைக் காட்டிவிடுவார். ஏனென்றால், அவன் சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தைப் பெற்றவன். சிவன் வகுத்த சட்ட திட்டங்களை பக்தர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்று சோதிப்பவன். ஒருமுறை சிவபார்வதியின் நடன நிகழ்ச்சி கைலாயத்தில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட அரங்கத்தை நிர்மாணித்தாள் பார்வதிதேவி, நடன நேரமும் குறிக்கப்பட்டது. சிவன் பார்வதியிடம், தேவி! நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே! என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே! ...

மண்டோதரி எனும் பதிவிரதை!

கணவனின் உயர்வில், கண்ணும் கருத்துமாகச் செயல்படுபவளைப் பதிவிரதை என்கிறோம். கணவனை அரவணைப்பவள்; சிந்தனை தடுமாறும்போது விழித்துக் கொண்டு நேர்வழியில் செல்பவள்; முழுமையாக வாழ, இடையே வருகிற இன்னல்களை அகற்ற உதவுபவள்; கணவனின் உயர்வில், இரண்டு மடங்கு உயர்ந்து நிற்பவள். இந்தக் குணங்களால்தான், அவள் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாள்! புராண நளாயினி துவங்கி சரித்திரக் கண்ணகி வரை பதிவிரதைகள் பலரை அறிவோம். புறத்தோற்றத்தைப் புறக்கணித்து, அகத்தோற்றத்தில் ஆனந்தம் காணும் அவர்களது பக்குவம், பதிவிரதா தர்மத்தின் மிக முக்கியமான ஆதாரம்! புகழ்மிக்க பதிவிரதைகளின் பட்டியலில், மண்டோதரிக்கும் சிறப்பான இடம் உண்டு. மந்தோதரி என்றுதான் பெயர் அவளுக்கு ஆனால், காலப்போக்கில் மண்டோதரி என்றாகி விட்டது. மந்தோதரி என்றால், சிறுத்த இடையாள் என்று பொருள். சாமுத்ரிகா லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவள்; கைப் பிடித்த கணவனுடன் காலம் முழுவதும் பாதுகாப்பாக இணைந்தவள். ஒன...

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

லட்சுமணன் என்ற வியாபாரிக்கு எந்த நேரமும் வியாபாரத்தைப் பற்றிய கவலைதான். அவரது மனைவி ஊர்மிளா, குடும்பம், குழந்தை என ஒருநாளாவது வீட்டில் இருக்க கூடாதா? என கேட்டுக் அலுத்துப் போனாள். நான் ஒருநாள் வீட்டிலே இருந்தா ஆயிரம் ரூபாய் நஷ்டப்படும். நீ உன் அப்பன் வீட்டில் இருந்தா அதைக் கொண்டு வருவே, என கொடூரமாகப் பேசுவார். இதற்குப் பயந்தே, அவர் மனைவி வாயைத் திறப்பதில்லை. ஒரு சமயம் திடீரென வியாபாரம் குறைந்தது. வியாபாரி கவலையுடன் இருந்தபோது ஒரு சாமியார் கடைப் பக்கமாக வந்தார். தம்பி! நெஞ்சு எரிச்சலா இருக்குது! ஒரு துண்டு இஞ்சி கொடேன். அதை சாறுபிழிந்து குடித்தால் சரியாகி விடும், என காசை நீட்டினார். வியாபாரி அவரிடம் காசு வாங்கவில்லை. சாமி! எனக்கு காசுக்கு பதிலாக, நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன். நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், என்றார். சாமியும், அப்படி என்னப்பா கேள்வி? என கேட்க, வியாபாரி தனது வியாபாரம் திடீரென குறைந்து விட்டது பற்றியும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும், என்றும் சொன்னார். சாமியார் அவரிடம், நீ தர்மம் செய்வாயா? என்றார். அதெல்லாம் செய்றதில்லே சாமி! ...

பிரகலாதனின் முற்பிறவி!

துவாரகையில் வசித்த சிவசர்மா, வேத சாஸ்திரங்களை கற்று புலமை பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுக்கு குருவாக இருந்து வேதத்தை கற்றுக் கொடுத்தார் சிவசர்மா. வேதம் பயில்பவர்கள் குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை செய்ய வேண்டும். தன் மகன்கள் அவ்வாறு இருக்கின்றனரா என சோதிக்க நினைத்தார் சிவசர்மா. அதற்காக ஒரு தந்திரம் செய்தார். தன் மனைவி, இறந்து கிடப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, மூத்த மகன் யஜ்ஞசர்மாவை அழைத்தார். அவனிடம், உன் தாய் இறந்துவிட்டாள். அவளது உடலை வாளால் வெட்டி வீசி விடு! என்றார். அவனும் அப்படியே செய்தான். பின் ஒரு அழகிய பெண்ணை படைத்து, இரண்டாவது மகன் வேதசர்மாவை அழைத்தார். அவனிடம் அப்பெண்ணை, தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டார். வேதசர்மா அவளிடம், தன் தந்தையை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளோ மறுத்தாள். அவள் மனதை மாற்றுவதற்காக, எதைக் கேட்டாலும் தருவதாகச் உறுதியளித்தான் வேதசர்மா. அவள் அவனது தலையைக் கேட்டாள். அவனும் தன் தலையை வெட்டிக் கொடுத்து விட்...

தைப்பொங்கல்

பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை- 7.30 மணி முதல் 8.30 மணி வரை தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே இம்மாதத்தின் சிறப்பை உணர்த்தும். தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளே பொங்கல் பண்டிகையாகும். கேரளாவிலும், வட மாநிலங்களிலும் இந்நாளை "மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். "சங்கரமணம் என்றால்" நகரத் தொடங்குதல் என்பது பொருள். இந்நாளில் சூரியன் மகர ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இது, உத்ராயண புண்ணிய காலத்தின் துவக்கமாகும். விவசாயிகள் முதன்முதலில் அறுவடை செய்த பயனுக்காக, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடுவதே இவ்விழாவின் அடிப்படையõகும். அன்று, வயலில் விளைந்த புதிய நெல்லை குத்தி அரிசியாக்கி, அதில் பொங்கலிட்டு கண்ணிற்கு தெரியும் கடவுளான சூரியனுக்கு படைப்பர். செய்ந்நன்றி மறக்கக்கூடாது என்ற அரிய தத்துவத்தை உணர்த்தும் நாள் இது.தைப்பொங்கலன்று வாசலில் அடுப்பு வைத்து பொங்கலிடுவர். பொங்கல் பானையில் பால் கொதித்துவரும்போது, ""பொங்கலோ பொங்கல் என்று குரல் எ...

அமெரிக்கா, அருள்மிகு ராமர் திருக்கோயில், டெக்சாஸ்

தலவரலாற்று : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில், சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்டதாகும். இக்கோயில் 1999 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதியன்று, உலகளாவிய சின்மயா மிஷன் அமைப்பின் தலைவரான சுவாமி தேஜோமயானந்தாவால் துவங்கி வைக்கப்பட்டது. இக்கோயிலில் ராம பிரான், சீதா தேவி, லட்சுமணர் மற்றும் ஹனுமான் ஆகிய பரிவாரங்களுடன் கருவறையில் காட்சி அளிக்கிறார். இது தவிர கணேசர், சிவன் போன்ற தெய்வங்களுக்கென தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி கண்ணாடிகளின் மீது அழகிய வேலைப்பாடுடனான சின்மயா மிஷனின் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இதன் மீது காவி நிறத்தால் ஆன குருதேவரின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது, இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. கோயில் முகவரி : டாலாஸ் ஃபோர்ட் வொர்த் சின்மயா மிஷன், சின்மயா சாகெட், 17701 டவென்போர்ட் ரோடு, டாலாஸ், டெக்சாஸ் -75252, யு.எஸ்.ஏ. தொலைப்பேசி : +1-972-250 2470 இணையதளம் : http://www.chinmayasaaket.org/

அமெரிக்கா ,ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், தெற்கு டெக்சாஸ்

தலவரலாறு : தெற்கு டெக்சாஸ் இந்து சமூக அமைப்பின் சார்பில் கார்பஸ் கிறிஸ்டி பகுதியில் 2002ம் ஆண்டு ஆகம சாஸ்திர விதிப்படி ஸ்ரீ வெங்கடேஷ்வரர் திருக்கோயில் உருவாக்கப்பட்டது. தெற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள இந்து சமூகத்தினருக்கு சேவை ஆற்றுவதும், மத சேவைகள் புரிவதும் இக்கோயிலின் முக்கிய நோக்கமாக கொள்ளப்பட்டது. தெற்கு டெக்சாஸ் இந்து சமூக அமைப்பின் உறுப்பினர்களான சுப்பாராவ் புர்ரா, லலிதா ஜானகி, ராமகிருஷ்ண முலுகுட்லா,பனுகந்த் பட்டேல், எம்.பி.சுதாகரன் ஆகியோரின் சீரிய முயற்சியால் இக்கோயில் கட்டப்பட்டது. கோயிலின் வளர்ச்சிப் பணியாக இந்திய சமூகத்தினருக்கு பயன்படும் விதமாக சமூக அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டது. லாப நோக்கமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் சமூக பணிகளுக்காக ஸ்டிவர்டு ரைஸ் என்பவரால் நிலம் பெறப்பட்டது. அதே சமயம் கோயிலுக்கென கணபதி, வெங்கடேஷ்வரர், பத்மாவதி, ஆண்டாள், சிவன், கருடர் மற்றும் துவாரபாலகர்கள் உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கோயிலுக்கான நிதி வசூலிக்கப்பட்டது. கோயிலின் நிர்வாக உறுப்பின...

அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக்கா

தலவரலாறு : டெக்சாசின் ஃபிரிஸ்கோ பகுதியில் உள்ள தாலாசில் அமைந்துள்ள அழகிய ஆலயம், அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் ஆகும். பரம பூஜ்ய ஸ்ரீ சுவாமிஜி தாலாஸ் மற்றும் ஹோஸ்டன் பகுதியில் உள்ள சட்சாங் குழுவினரை 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சந்தித்து, தத்தா கோயில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அப்பகுதியிலுள்ள பக்தர்களின் உதவியுடன் தாலாஸ் பகுதியில் நிலம் பெறப்பட்டு அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் கட்டப்பட்டது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்திலேயே முற்றிலும் கல்லால் உருவாக்கப்பட்ட ஒரே ஆலயம் இதுவாகும். சுவாமிஜியின் அரிய முயற்சியால் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலயம் அமைப்பதற்காக நிலம் தேடும் பணி துவங்கப்பட்டது. இப்பணி செப்டம்பர் மாத இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் தாலாஸ் பகுதியில் பெறப்பட்ட நிலம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் விலைக்கு வாங்கப்பட்டது. வேகமாக முன்னேறி வந்த நகரங்களில் ‌ஒன்றான ஃபிரிஸ்கோ பகுதியில் இக்கோயில் அமைக்கப்பட்டது. குடியிறுப்பு பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிக அருகில் தேவாலயமும், பள்ளியும் இருப்பது தனிச்சிறப்பானதாகும். வாகனங...

அருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா

ஆலய வரலாறு : அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கணேசர் திருக்கோயில் . சமூக சேவை மன்றமாக பதிவு செய்யப்பட்ட இவ்வமைப்பு 1999 ம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பக்தர்களின் வழிபாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக அருள்மிகு கணேசர் திருக்கோயில் உருவாக்கப்பட்டது . கவய் இந்து துறவிகள் மட நிறுவனர் சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி என்பவரால் இக்கோயிலில் மூலவர் விக்ரஹம் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது . ஹவாய் தீவில் உள்ள துறவிகள் மடம் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்டிருப்பதற்கும் இவரே முக்கிய காரணமாகும் . பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடா பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்கள் ஒன்று கூடும் இடமாக இக்கோயில் திகழ்கிறது . அதனால் இக்கோயில் ஆன்மிக , கலாச்சார , கல்வி , சமூக நிகழ்வுகள் மற்றும் சேவைகள் செய்யும் இடமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது . தற்போது இக்கோயிலுக்கு விநாயகப் பெருமானை வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது . இந்துக்...

பதினெட்டாம் படி பாலகன் வரலாறு்

அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது.... தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள். தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் ...

படிப்பு தரும் குட்டி சாஸ்தா

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை. சரண கோவை மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் தினமும் காலை, மாலையில் நீராடி விட்டு ஐயப்பனின் 108 சரணக்கோவையை மனதில் பயபக்தியுடன் பாடவேண்டும். இதனை மிகவும் ...

நாலும் அறிந்த நாயகன்

நாலும் தெரிந்தவர் என்றால் "அனைத்தும் அறிந்தவர்' என்று பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வார்த்தையைச் சொல்வதுண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களைக் கரைத்துக் குடித்தவரே நாலும் அறிந்தவர் என்ற பொருளில் சொல்லப்படுவதுண்டு. சபரிமலை ஐயப்பனும் "நாலும் அறிந்தவர்' ஆகிறார். ஏனெனில், அவர் நான்கு ஆசனங்களையும், நான்குவித முத்திரையையும் உள்ளடக்கி அருள்பாலிக்கிறார். ஐயப்பனின் 4 ஆசனங்கள்: 1.தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரையிலும், 2.கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், 3.குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், 4.அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் ...

மதுரையில் ஒரு சபரி

பரிமலையில் மகரவிளக்கு பூஜை கொண்டாடுவதைப்போல் மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயிலிலும் விழா கொண்டாடப்படுகிறது. புதுசாரி விஷ்ணு நம்பூதிரி என்பவர் பார்த்த தேவபிரஸ்னத்தின்படி இக்கோயில் கட்டப்பட்டது. 1980ல் சிருங்கேரி சாரதாபீட மடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் அடிக்கல் நாட்டினார். இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது. கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது. கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.1986 ஜூலை 13ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கல்லூர் மாதவன் நம்பூதிரி கும்பாபிஷேகத்தை நடத்தினார். துவஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) ஜூன் 2001லும், நவக்கிரகங்கள் 2005லும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இங்கு தி...

ஐயப்பனின் சின்முத்திரை

பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும். ஆரம்பகால பூஜை ஒரு காலத்தில் சபரிமலையில் தர்மசாஸ்தாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாள் மகரஜோதி அன்று மட்டும்தான் பூஜை நடந்தது. நிலக்கல் என்ற இடத்திலிருந்து பக்தர்கள் சென்று பூஜை நடத்தி வந்துள்ளனர். ஐயப்பன் தர்மசாஸ்தாவிடம் ஐக்கியமான பிறகுதான் மண்டல பூஜை, மகரவிளக்கு, மாத ...

சபரிமலை பிறந்த கதை

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன் ஐயப்பனை களவாடி சென்றான். எனவே, நாட்டை காக்கும் வீரனாக சாஸ்தா அவதாரம் எடுத்தார். உதயன் திருவிதாங்கூர் அரசின் அரண்மனை செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு இளவரசியை கடத்த முயற்சி செய்தான். ஜயந்தன் என்பவன் அவளை காப்பாற்றி மணந்து கொண்டான். அவர்களுக்கு சாஸ்தா மகனாகப் பிறந்தார். "ஐயப்பன்' என்று அவனுக்கு பெயர் சூட்டினர். ஜயந்தன் ஐயப்பனுக்கு யுத்த பயிற்சிகளுடன் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தான். பந்தள அரண்மனையில் பணியில் சேர்ந்தார் ஐயப்பன். அவனது அறிவும் வீரமும் மன்னனை ...

சாவித்திரியின் புத்திசாலித்தனம்!

சத்தியவானை சாவித்திரிஎமனிடமிருந்து மீட்டாள் என்பது வரை நிமக்கு தெறுயும். ஆனால் எப்படி மீட்டாள் என்பது தெறுய வேண்டுமல்லவா...அவளிடம் எமன் சொன்னான். அம்மா! உனக்கு உன் கணவனின் உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் தருவேன். கேட்டுப்பெற்றுக்கொள், என்றான். உடனே சாவித்திரிபுத்திசாலித்தனமான பதிலை சொன்னாள். அவளது கணவனின் உயிர் திரும்ப கிடைத்தது. சாவித்திரிஅப்படி என்ன சொன்னாள்? என்பதை அறியத்தானே ஆவலாக இருக்கிறது! இதை தெறுந்து கொள்ள வேண்டுமானால் அப்படியே கதைக்குள் செல்லுங்கள்... மந்திரதேசம்...வளம் மிக்க ஒரு நாடு. மக்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் எல்லோர் மனதிலும் ஒரு குறை. நாட்டின் எதிர்காலம் யார் கையில் இருக்கப்போகிறது என்பதே அந்த கவலை. மன்னர் அஸ்வபதிக்கு வாறுசுகளே இல்லை. அவர் சரஸ்வதி தேவியிடம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என கேட்டார். மன்னர் கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியிடம் குழந்தை வரம் கேட்டதில் ஏதோ உள்÷நாக்கம் இருக்க வேண்டும் என்று மக்கள் எல்லாம் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். குழந்தை வரம் வேண்டுமானால் பார்வதி தேவியிடம்தானே கேட்டிருக்க வேண்...

கும்பகர்ணனின் தூக்கம்!

சிலர் இரவும், பகலும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருப்பார்கள். சாப்பாட்டை முடித்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். சிலபேர் அலுவலகங்களில் தூங்குவார்கள். சிலர் கடையில் தூங்குவார்கள். இப்படி தூங்குபவர்களை, என்னப்பா! கும்பகர்ணன் மாதிரி தூங்குறியே, என்று கிண்டல் செய்வதுண்டு. கும்பகர்ணனுக்கு இந்த தூக்கம் வர காரணமானவர் யார் தெரியுமா? நம்ம நாரதர் தான். நாரதர் குழப்பவாதி. ஆனால் நல்லது நடக்கவே குழப்புவார். எல்லாரையும் தெய்வங்கள் சோதிக்கும் என்றால், தெய்வங்களை இவர் சோதிப்பார். அப்பேர்ப்பட்ட மகாத்மா அவர். ராவணன் பத்து தலைகளை உடையவன். மிகப்பெரிய சிவபக்தன். ஆனால் குணம் தான் ராட்சஷ குணம். அவன் மனதைக் கெடுத்தது அவனது சகோதரி சூர்ப்பனகை. ராமன் மீது ஆசைப்பட்ட அவள், அவனைத் திருமணம் செய்ய எண்ணினாள். ஏகபத்தினி விரதனான ராமன் அவளை விரட்டி அடித்து விட்டான். லட்சுமணன் அவளது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். இந்த அவமானத்தை சூர்ப்பனகையால் தாங்க முடியவில்லை. தன் அண்ணன் கும்பகர்ணனிடம் வந்து அழுதாள். கும்பகர்ணன் கடும் கோபம் கொண்டு...

பெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்!

பெண்ணைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் நாகப்பட்டினம் சவுந்தரராஜப் பெருமாளை தரிசித்து பலனடையலாம். தல வரலாறு: உத்தானமகாபாத மகாராஜாவின் மகன் துருவன். பெருமாள் பக்தரான இவர், சிற்றன்னையால் ராஜ்யம் தரப்படாமல் அவமானப்படுத்தப்பட்டார். இதனால், ராஜ்யப் பதவியை விட உயர்ந்த பதவி தனக்கு வேண்டுமென கோரி, சவுந்தர்ய ஆரண்யம் என்னும் காட்டில் பெருமாளை வேண்டி கடும் தவம் செய்தார். சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் கருடாழ்வார் மீது, பேரழகு பொருந்தியவராக பெருமாள் காட்சி அளித்தார். அவர் துருவன் வேண்டிய வரத்தை அளித்து வானமண்டலத்தில் துருவ நட்சத்திரம் ஆக்கினார். அழகாகத் தோன்றிய பெருமாளுக்கு "சவுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. பெருமாளின் திவ்யதரிசனம் கண்ட துருவன், ""என் வாழ்க்கையில் எப்போதும் உன்னுடைய ஞாபகம், உன்னுடைய சிந்தனையாக இருக்க வரம் வழங்க வேண்டும், இந்த இடத்தில் எனக்கு அனுக்கிரஹம் செய்தது போல், உன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் இதே இடத்தில் தங்கி அனுக்கிரஹகம் செய்ய வேண்டும்', என்று வேண்டினார். பெருமாளும் அங்கேயே சிலை வடிவ...

காஞ்சியின் கலைக்கோயில்

சென்னையில் வசித்த சுப்பிரமணியன் , காஞ்சிப்பெரியவரின் மீது தீவிரபக்தி கொண்டவர் . எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் சுவாமிகளைச் சந்திக்கத் தவறியதில்லை . 1983 பிப்ரவரியில் மஹாகாவ்ம் முகாமிற்குச் சென்று தரிசனம் செய்தார் . அப்போது அவர் சுவாமிகளிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார் . ""பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க எண்ணுகிறேன். ஆனால், எனக்கு நாளையோடு லீவு முடிந்துவிடுகிறது. நாளை மறுநாள் அலுவலகத்திற்கு அவசியம் செல்லவேண்டும். அதற்குள் பாண்டுரங்கனைத் தரிசிக்கும்பேறு கிடைத்தால் சந்தோஷம் அடைவேன்,'' என்று விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். பெரியவரும் அவருக்கு ஆசி வழங்கி பிரசாதம் கொடுத்தார்கள். பெரியவரின் அருளால் நாளை உறுதியாக பண்டரிநாதனைத் தரிசிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு பண்டரிபுரம் கிளம்பினார் சுப்பிரமணியம். ஆனால், அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தில் அங்கு கட்டுக்கு அடங்காமல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசையில் மக்கள் தரிசனத்திற்குக் காத்து நின்றனர். நம்பிக்கையோடு வந்தும் பாண்டுரங்கனைக் காண முடியவில்லை...

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !

அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...