மனிதர்களின் அற்ப ஆயுள்! ஒரு முறை தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் இந்திரன், பதினான்கு உலகங்களிலும் இப்படி ஒரு மாளிகை இல்லை என்று சொல்லும்படியாக மிகச்சிறந்ததும் மிகப் பெரியதுமாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என உத்தரவிட்டான் விஸ்கர்மாவும் தன் உதவியாளர்களுடன் மாளிகை கட்ட தயாரானார். இந்திரனின் விருப்பப்படி மாளிகை கட்ட வேண்டியிருந்ததால், பல தேவ வருடங்கள் ஆகியும் விஸ்வகர்மாவால் அப்படி ஒரு மாளிகையை கட்டி முடிக்க முடியவில்லை. விஸ்வகர்மாவும் அவரது உதவியாளர்களும் களைத்து போயினர். நொந்து போன இந்திரன் என்ன செய்வது என சிந்தித்து கொண்டிருக்கும். வேளையில், சாகா வரம் பெற்ற லோமசர் என்ற மகரிஷி அங்கு வந்தார். அவருக்கு உடம்பெல்லாம் ரோமங்கள் இருந்ததால் லோமசர் என்று பெயர். இவருக்கு இடுப்பில் சிறு துணியும் தலையில் ஒரு பாய் மட்டுமே சொத்து. அவரைப் பார்த்து இந்திரன், மகரிஷி ! பாயை எதற்கு தலைக்கு மேலே விரித்தாற் போல் வைத்திருக்கிறீர்கள் ? எனக் கேட்டான். அதற்கு லோமசர், இந்த உடலோ வீணானது. இதைக் காப்பாற்றுவதற்க...