* அநீதி பூமியில் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் யுகம்தோறும் அவதரிக்கிறேன்.
* கண்மூடி மனதை அடக்குவது மட்டும் தியானமல்ல. மகிழ்வோடு இருத்தல், சாந்தமான போக்கு, மவுனம், மனதை அடக்கி ஆளுதல், உள்ளத்தூய்மை ஆகிய இவையெல்லாம் கூட தவம் தான்.* மனம் தன் சஞ்சலத்தைக் காட்டும் போதெல்லாம், உடனுக்குடன் அடக்கி நம் வசப்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும்.
* விரும்பியதை அடைந்து வரம்பின்றி மகிழ்வதும் கூடாது. துன்பம் வரும் போது மனம் சிதையவும் கூடாது. மனஉறுதியுடன் தயக்கத்திற்கு இடம் கொடாமல் மெய்ப்பொருளை உணர்ந்து பிரம்மநிலையில் நிற்க வேண்டும்.
* மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் சாந்தியும், இன்பமும் பெறமுடியாது.
* மனதை அடக்கி இருந்தாலும், சில சமயங்களில் ஐம்பொறிகள் வழியாக ஆசைப்புயல் எழுந்து, மனிதனுடைய அடக்கசக்தியை வேரோடு பறிக்க முயல்வதுண்டு. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்துவிடாமல், என்னை உறுதியாக பற்றிக் கொள்வானாக.
* பட்டினி கிடக்கும் மனிதனிடம் பலவித இச்சைகளும் அடங்கிப் போகின்றன. ஆனால், அவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரில் தரிசித்தாலன்றி அவற்றில் உள்ள ஆசை நீங்குவதில்லை.
* கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் குழப்பம் உண்டாகிறது. குழப்பத்தால் புத்தி கெடுகிறது.
* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது; நினைவு அழிகிறது. உயரிய லட்சியம் மறைந்து போகிறது. அப்போது மனிதனே அழிந்து விடுகிறான்.
* தானம் செய்வது நமது கடமை என்னும் உணர்வோடு, இடம், தகுதி, காலம் ஆகியவற்றையும் கவனித்து, திரும்பத்தர இயலாதவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானம் எனப்படும்.
* மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது தாமஸ தானம் ஆகும்.
* பசுவிடம் உள்ள பால், உண்மையில் அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளது என்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் விரவியிருக்கிறான் எனினும், தியானத்தால் தான் நம் மனதில் எழுந்தருளுகிறான்.
Comments
Post a Comment