Skip to main content

நமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ...டி பூமிகள்!!!

சிகாகோ: நமது நட்சத்திரக் கூட்டத்தில் மட்டும் கோடிக்கணக்கான பூமிகள் இருக்க வேண்டும், அவற்றில் நம்மைப் போன்ற முதிர்ச்சி அடைந்த மனித இனம் இருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது என்கிறார் ஆலன் பாஸ் என்ற அறிஞர்.

அமெரிக்காவில் உள்ள கார்நெகி அறிவியல் கழகத்தின் ஆலன் பாஸ் தர்க்க ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் கிடைத்த சில கருதுகோள்களை வைத்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் கூட்டத்தில் பேசுகையில் இத்தகவலை அவர் வெளியிட்டார்.

"மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால்கூட நமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் 300-க்கும் மேற்பட்ட கிரகங்களைத்தான் பார்க்க முடிந்தது. இவற்றில் வெகு சிலவற்றில்தான் ஏதாவது ஒரு வகை உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறது. பெரும்பாலானவை வாயுக்கள் நிரம்பிய கிரகங்கள்தான்.

இந்த கிரகங்கள் தங்களுடைய தாய்கிரகமான நட்சத்திரங்களை மையமாக வைத்தே சுற்றி வருகின்றன. அந்த நட்சத்திரங்கள் இன்னமும் கொதிப்பு அடங்காத நெருப்புக்கோளங்கள். அந்த நட்சத்திரங்களுக்கு அருகில் செல்லும் கிரகங்களில் எந்தவகை உயிரினங்களும் இருப்பதற்குச் சாத்தியம் இல்லை.

ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, சூரிய குடும்பத்தைச் சாராத கிரகங்களின் எண்ணிக்கை, அமைப்பு ஆகியவற்றை ஆராயும்போது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நம்முடைய பூமியைப் போல குறைந்தது ஒரு துணை கிரகமாவது இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான பூமிகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்றவையாக இருக்கும் என்பது மட்டும் அல்ல, இவற்றில் உயிரினங்கள் இப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு நிறைய சாத்தியம் இருக்கிறது.

பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகை பிற பூமிகளில், 300 கோடி அல்லது 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே நமது பூமியில் இருந்ததைப் போன்ற ஜீவராசிகள் -அதாவது பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் இருப்பதற்கு சாத்தியம் அதிகம்.

பூமியில் உள்ள மனிதர்களைப் போலவே அறிவு முதிர்ச்சி உள்ள மனித இனங்கள் பிற கிரகங்களில் எத்தனை இருக்கும் என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்திய கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் இருக்கும் என்ற பதில் அப்போது கிடைத்தது' என்கிறார் ஆலன் பாஸ்.

Comments

Popular posts from this blog

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !

அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...

Amazing Oranges~~simply superb

ஆதிசங்கரர் அவதாரம்!

கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார். அயாசகனின் மனைவி...