Skip to main content

வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த சட்டம் முழுமை பெறும்போது இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களாக மாறுவர். டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றும் இவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் ஓட்டுரிமை கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு அமைச்சர் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியன் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவின் ஒப்புதல் மத்திய காபினட் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் . பின்னர் பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் அங்கீகாரம் பெற்று முழுமை பெறும்.

ஓட்டு போட ரெடியாகுங்கள்: இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்; இந்த சட்ட முன்னேற்பாடு அனைத்து பணிகளும் தயாராகி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்வதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருக்க முடியும் என்றார்.

படிப்பு மற்றும் பணி காரணமாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும் ஓட்டு பட்டியலில் பெயர் நீடித்து இருக்க சில சலுகைகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும் , வரும் லோக்சபா தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஓட்டு போட ரெடியாகுங்கள்!

Comments

Popular posts from this blog

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !

அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...

Amazing Oranges~~simply superb

ஆதிசங்கரர் அவதாரம்!

கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார். அயாசகனின் மனைவி...