Skip to main content

இவர் தான் சனீஸ்வரன்


யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்... தப்பு செய்துவிட்டு சக்தி தேவியிடம் ஓடினால் தாய் பாசத்தோடு அணைத்துக் கொள்வாள். சிவன் தலையில் இரண்டு குட்டி குட்டி சேர்த்துக் கொள்வார். மாயக்கண்ணன், ஏதாவது கள்ளத்தனம் செய்து சிறிதளவு சோதிப்பதோடு நிறுத்திக் கொள்வான். ஆனால், இந்த சனீஸ்வரன் இருக்கிறாரே... கடவுளாக இருந்தாலும் கூட தன் வேலையைக் காட்டிவிடுவார். ஏனென்றால், அவன் சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தைப் பெற்றவன். சிவன் வகுத்த சட்ட திட்டங்களை பக்தர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்று சோதிப்பவன். ஒருமுறை சிவபார்வதியின் நடன நிகழ்ச்சி கைலாயத்தில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட அரங்கத்தை நிர்மாணித்தாள் பார்வதிதேவி, நடன நேரமும் குறிக்கப்பட்டது. சிவன் பார்வதியிடம், தேவி! நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே! என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே! தாங்களும், உலகாளும் நானும் தான் நவக்கிரககங்களையே படைத்தோம். அவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா? தாங்கள் சொல்வது நகைப்பாக இருக்கிறது, என்றாள்.

தேவி! சட்டத்தை இயற்றுபவர்களே அதை மீறினால், உலகத்தினர் எப்படி அதை மதித்து நடப்பார்கள்? நீ சொல்வது சரியல்ல. நேரத்தை மாற்று என்றார் சிவன். பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. ஈசனே! ஒரு கிரகத்துக்கு பயந்து நேரத்தை மாற்றமாட்டேன். நீங்கள் சனீஸ்வரனிடம் போய், அரங்கத்தை எரிக்கக் கூடாது என நான் சொன்னதாக உத்தரவிட்டு வாருங்கள். அவன் கேட்க மறுத்தால், உங்கள் உடுக்கையை ஒலியுங்கள். அதன் சப்தம் கேட்டதும், அவன் அரங்கத்தை அழிப்பதற்குள் நானே இதை எரித்து விடுகிறேன், என்றாள். சிவனும் சனீஸ்வரனிடம் சென்றார். விஷயத்தைச் சொன்னதும் ஐயனே! என்னைப் படைத்ததாயின் கட்டளையை நான் மீறுவேனா? அதிலும் தாங்களும், அம்பிகையும் ஆடும் நடனத்தைக் காண எனக்கும் ஆசை இருக்காதா? நீங்கள் அதை இங்கேயே ஆடிக் காட்டுங்கள். எனது லோகத்திலேயே உங்கள் திருநடனம் நிகழ ஆசைப் படுகிறேன், என்றார் சனி பகவான். சனீஸ்வரனின் வேண்டுகோலை ஏற்று சிவன் உடுக்கையை ஒலித்தபடியே நடனமாடத் தொடங்கினார்.உடுக்கை சப்தம் கேட்டதோ இல்லையோ, சனீஸ்வரன் தன் கோரிக்கையை ஏற்கவில்லையோ எனக்கருதிய அம்பிகை, தான் நிர்மாணித்த அரங்கத்தை, தன் பார்வையாலேயே எரித்து விட்டாள்.

சனீஸ்வரனின் கடமை உணர்வைப் பார்த்தீர்களா? தெய்வங்களையே அவர் இப்படி படுத்துகிறார் என்றால், நம்மை விட்டு வைப்பாரா என்ன? நாம் நமது பணிகளை நல்ல முறையில், ஒழுக்கமான முறையில் கவனித்தால் நம்மை அவர் ஏதும் செய்யமாட்டார். புரிகிறதா?

Comments

  1. புது வருஷம் சனிக்கிழமையன்று பார்த்திருக்கிறேன். பயபக்தியுடன் ஒப்புக் கொள்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !

அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...

Amazing Oranges~~simply superb

ஆதிசங்கரர் அவதாரம்!

கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார். அயாசகனின் மனைவி...