Skip to main content

Posts

ஆதிசங்கரர் அவதாரம்!

கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார். அயாசகனின் மனைவி
Recent posts

பொல்லாப்பிள்ளையார் எங்கிருக்கிறார்?

குறும்பு செய்யும் குழந்தைகளை "பொல்லாப் பயல்' என்று திட்டுவதுண்டு. பிள்ளைக்கடவுளான விநாயகரும் பொல்லாப்பிள்ளையார் என்று பெயர் பெற்றிருக்கிறார். அவர் வரலாற்றைத் தெரிந்து கொண்டால் அவர் பொல் லாதவரா நல்லவரா என்ற உண்மையை அறிந்து கொள்வீர்கள். அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் சிவத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். அன்று கோயிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை. பிள்ளையாரே சாப்பிட்டு விட்டதாக நம்பி சொல்ல, மற்றவர்கள் அதை நம்பவில்லை. இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழனும் இதை நம்பவில்லை. இருப்பினும

இந்தப் புன்னகை என்ன விலை?

விநாயகப்பெருமான் புன்னகையிலேயே பூத்த மலர் என்கிறது பிரமாண்ட புõரணம். இந்த புராணத்தில் லலிதோபாக்யானம் என்ற பகுதி வருகிறது. அதில் விநாயகரின் பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. பண்டாசுரன் என்பவன் தேவர்களை மிகவும் கடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என தேவர்கள், பார்வதிதேவியிடம் முறையிட்டனர். பார்வதி தனது பெண் சேனைகளுடன் லலிதாம்பிகை என்னும் பெயர் தாங்கி புறப்பட்டாள். சிவனும் காமேஸ்வரர் என்ற பெயர் தாங்கிவந்தார். அதனால், அம்பாளுக்கு "காமாட்சி' என்ற பெயரும் வந்தது.(புராணகாலத்திலேயே ராணுவத்தில் பெண்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இது சாட்சி). அக்னிகோட்டை ஒன்றை எழுப்பி, அதனுள் தங்கிவிட்டாள். இதையறிந்த பண்டாசுரன், தனது உதவியாளரான விசுக்ரன் என்பவனை அனுப்பி, ""தேவியின் படைகளைச் செயல்பட விடாமல் செய்து விடு,'' என்று உத்தரவிட்டான். விசுக்ரன் ஆரவாரத்துடன் தேவி தங்கியிருந்த இடத்துக்கு வந்தான். ஆனால், சுற்றிலும் அக்னி எரிந்ததால் அவனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. உடனே அவன் ஒரு யந்திரத்தை தயாரித்தான். அதற்கு

விநாயகர் சதுர்த்தி வழிபாடு

விநாயகர் அவதரித்த சதுர்த்தி நன்னாளில் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டிய வழிபாடு இதுவாகும். இதனால், செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம் உண்டாகும். நல்ல குழந்தைகள் வாய்ப்பர். சாதிக்கும் ஆற்றலும், மனோதிடமும் ஏற்படும் * கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனைக் கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம். * இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வ வளத்தை அருள்பவனே! எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப்பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம். * உலக மக்களுக்கு நலம

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை! - கீதையில் கண்ணன்

* அநீதி பூமியில் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் யுகம்தோறும் அவதரிக்கிறேன். * கண்மூடி மனதை அடக்குவது மட்டும் தியானமல்ல. மகிழ்வோடு இருத்தல், சாந்தமான போக்கு, மவுனம், மனதை அடக்கி ஆளுதல், உள்ளத்தூய்மை ஆகிய இவையெல்லாம் கூட தவம் தான். * மனம் தன் சஞ்சலத்தைக் காட்டும் போதெல்லாம், உடனுக்குடன் அடக்கி நம் வசப்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும். * விரும்பியதை அடைந்து வரம்பின்றி மகிழ்வதும் கூடாது. துன்பம் வரும் போது மனம் சிதையவும் கூடாது. மனஉறுதியுடன் தயக்கத்திற்கு இடம் கொடாமல் மெய்ப்பொருளை உணர்ந்து பிரம்மநிலையில் நிற்க வேண்டும். * மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் சாந்தியும், இன்பமும் பெறமுடியாது. * மனதை அடக்கி இருந்தாலும், சில சமயங்களில் ஐம்பொறிகள் வழியாக ஆசைப்புயல் எழுந்து, மனிதனுடைய அடக்கசக்தியை வேரோடு பறிக்க முயல்வதுண்டு. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்துவிடாமல், என்னை உறுதியாக பற்றிக் கொள்வானாக. * பட்டினி கிடக்கும் மனிதனிடம் பலவித இச்சைகளும் அடங்கிப் போ

ராமானுஜர் ஜெயந்தி

வைணவம் வளர மிகவும் பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர். அதில் அவருக்கு எவ்வளவோ சங்கடங்கள் ஏற்பட்டன. இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு பல புரட்சிகளைச் செய்தார். ஆரம்ப காலத்தில் அவர் குருகுல வாசம் செய்யும்போதே அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் கஞ்சியை அடுத்த திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் வேதாந்தக் கருத்துக்களைக் கற்று வந்தார். அப்போதே அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதன் காரணமாக ராமானுஜரின் பெருமை வளர்ந்தது. அதைக் கண்டு ராமானுஜர்மேல் வெறுப்படைந்த யாதவப் பிரகாசர் ராமானுஜரை கொலை செய்யவும் துணிந்து திட்டமிட்டார். அந்த சதியிலிருந்து ராமானுஜரின் சிற்றன்னை மகனான கோவிந்த பட்டரால் ராமானுஜர் காப்பாற்றப்பட்டார். எம்பார் என்ற கோவிந்த பட்டரின் முயற்சியாலேயே நாம் ராமானுஜரின் அருளைப் பெறுகிற பேறைப் பெற்றோம். பிற்காலத்தில் யாதவப் பிரகாசரே இராமானுஜரைச் சரணடைந்து அவரின் சீடராக மாறினார். அதுபோல மற்றுமொரு அத்வைதியான யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரிடம் 18 நாட்கள் வாதிட்டார். ராமானுஜர் வாத

சித்ரா பவுர்ணமி

சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். சித்ரா பவுர்ணமி: இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள். பூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம். சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம் எ